ஈரோடு மாவட்டம், பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு மாபெரும் கை கழுவுதல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர; திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர;கள், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர; திருமதி.சு.நாகரத்தினம் அவர;கள் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினா; திரு.ஏ.ஜி.வெங்கடாசலம் அவர;கள் ஆகியோர்; முன்னிலையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சார் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளின்போது, மாண்புமிகு மருத்துவம்; மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பரமணியன் அவர்கள் தெரிவித்ததாவது,

    உலக கை சுகாதார தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனைகள் மூலம் பரவும் கிருமித் தொற்றிலிருந்து சுகாதாரப்பணியாளர்களை காத்துக் கொள்வதற்காக ‘’Save lives – Clean your hands” என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையின் படி, 24 சதவீதம் நோயாளிகள் மருத்துவமனையில் ஏற்படும் தொற்றின் மூலம் பாதிப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் 52 சதவீதம் பேர் இவ்வகை தொற்றின் மூலம் இறக்கிறார்கள். நல்ல முறையில் கை சுகாதாரம் பேணப் பட்டு வந்தால் இந்த இறப்புகளில் 70 சதவீதம்  நாம் தடுக்க முடியும். இந்த உலக கை சுகாதார தினம், தமிழ்நாட்டில் உள்ள 2127 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒரே நேரத்தில் மாபெரும் “கை கழுவுதல் நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் அனைத்து சுகாதாரப்பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.

    மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல் (கொடைக்கானல்), ஈரோடு (தாளவாடி, பர்கூர்) சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைக்கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்களின் அனைத்து மருத்துவ தேவைகளும் கிடைக்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, புற்றநோய் அதிகம் பாதித்துள்ள ஈரோடு, ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரையில் அதிக எண்ணிக்கையிலான மலைக்கிராமங்கள் உள்ளன. பொதுவாக வட்டார மருத்துவமனையில் மட்டுமே பிரேத பரிசோதனை நிலையம் அமைக்கப்படுகிறது. தாளவாடி பொதுமக்களின் கோரிக்கையின்படி, தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரேத பரிசோதனை நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே போன்ற பர்கூர் மலைப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 3 எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் சேவையும் துவக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு நோய் தடுப்பு நடவடிக்கைக்காக அரசின் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென தெரிவித்தார.


    முன்னதாக, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் உலக சுகாதார தின உறுதி மொழியினை அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஃ திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.நாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ் இஆப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.என்.பொன்மணி இஆப., அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவனை முதல்வர் மரு.வள்ளி, இணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மரு.அம்பிகா, துணை இயக்குநர்கள் மரு.எஸ்.சோமசுந்தரம் (சுகாதாரப்பணிகள்), மரு.ராஜசேகர் (குடும்பநலன்), பேரூராட்சி மன்ற தலைவர;கள் திரு.ராஜேந்திரன் (பெருந்துறை), திரு.ஜி.கே.செல்வம் (கருமாண்டிசெல்லிபாளையம்), உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட தொடார்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்