50 நாட்களில் 5 ஆணவப் படுகொலைகள்

50 நாட்களில் 5 ஆணவப் படுகொலைகள்!மயிலாடுதுறையில் நடந்த நெஞ்சை உலுக்கும் ஆணவக் கொலையோடு சேர்த்து தவெக ஆட்சிக்கு வந்த கடந்த 50 நாட்களுக்குள் மட்டும், தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட கொடூரமான ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன!ஆனால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று மேடைக்கு மேடை வசனம் பேசிய ‘சோஃபா மாடல்’ அரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?இதுபோன்ற கொடூரமான குற்றச் சம்பவங்களுக்கு எதிராக வாய் திறக்கச் சொன்னால், முதலமைச்சர் விஜய் அவர்கள் “பேசாமல் சாதிக்கிறேன்” என்று மௌன சாமியாராக நாடகம் ஆடுகிறார்!தட்டிக் கேட்டால் கேமரா முன்னாடி சினிமா அடுக்கு மொழியில் ஏதேதோ வசனம் பேசுவது, சைகை செய்வது, அல்லது கூட்டணி கட்சியை ஏவிவிட்டு “அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு…” என்று எப்போதோ புளித்துப்போன, நடக்காத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பேச வைத்துத் திசை திருப்புவது… இதுதான் மாற்று அரசியலா?நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் என்னவாயிற்று? “அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சமத்துவச் சிந்தனையும் – சுயமரியாதையும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்க வேண்டும்” என்ற உயரிய நோக்கத்தோடு, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முந்தைய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு சிறப்பு ஆணையத்தை அமைத்தது.பாதிக்கப்பட்ட பல குடும்பங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்களது ஆவணங்களையும், சாட்சியங்களையும் அந்த ஆணையத்திடம் அளித்துள்ளார்கள்.சமூக நீதியைப் பற்றி மேடையில் மட்டும் முழங்கும் ‘இன்ஸ்டா அரசன்’ விஜய் அவர்களே, முந்தைய திமுக அரசு அமைத்த அந்த ஆணையம் இப்போது என்னவாயிற்று?அதன் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தவெக அரசு?எடுத்ததற்கெல்லாம் வாய் கிழியப் பேசும் நீங்கள், இதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் பறிக்கப்படும் போது மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?சமூக நீதியைக் காக்கத் துப்பில்லாத, நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாடு இன்று மீண்டும் இருண்ட காலத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது!இனியும் மௌனம் சாதித்தால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!

கொச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான கடல் உணவு தயாரிப்பு இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் 2-வது பரிசு பெற்றார்

கேரளத்தின் கொச்சியில் புதன் அன்று (01.07.2026) நடைபெற்ற இந்திய கடல் உணவு கண்காட்சி

பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

2026-ம் ஆண்டுக்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கான பரிந்துரைகள், விண்ணப்பங்களை மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மீண்டும் வரவேற்கிறது. விண்ணப்பங்கள் ஜூலை 31-ம்

தமிழ்நாடு முதலமைச்சர் .ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் .ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய