1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல். : 3. நடுவு நிலைமை
பகைவர், நண்பர், இரண்டுமல்லாத அயலவர் ஆகிய
மூவரிடமும் நடுநின்று உண்மைப்படி நடத்தல்
தக்கார் தகவுஇலர் என்பது அவர்அவர்
எச்சத்தால் காணப் படும்.
விளக்கம்:
ஒருவர் நேர்மையுடையவர் அல்லது நேர்மை இல்லாதவர் என்ற உண்மை அவருக்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ், பொருள், பழி இவற்றால் அறியப்படும்.







