அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கழிவுகளை கொட்டும் பகுதியாக மாறியுள்ள வைகை தென்கரை…

தமிழகம் முழுவதும் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவு காற்றில் பறக்கும் உத்தரவாகவே உள்ளது. இதனை அதிகாரிகள் ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டு கண்டுகொள்ளாததால் ஆறுகளும், குளங்களும் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. அதிலும் சமீப காலமாக வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை யாருக்கும் தெரியாமல் இரவு, பகல் என்று பாராமல் ஆறுகளிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான சாக்கடைகளில் கலந்து வருவதும் வழக்கமாக உள்ளது. இதனை தடுத்து சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பலனில்லை. இதற்கிடையே கோவில் மாநகரமான மதுரையிலும் இதுபோன்ற கொடுமைகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநா–தபுரம் ஆகிய 6 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய தேவைகளை பூர்த்தி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த ஆற்றில் அதிக அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் கால் நடை வளர்ப்போர் ஏராளமாக வசித்து வருகிறார்கள். அவர்கள் கால்நடைகளுக் கென்று தனியாக தங்களது சொந்த இடத்தில் கொட்டகை அமைத்து பராமரிக் காமல் சாலைகளில் சுற்றித் திரிய விட்டுள்ளனர். அவை இரவு, பகல் பாராமல் சாலைகளின் ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை உண்டும், படுத்து உறங்கியும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகிறது. திடீரென்று அந்த கால்நடைகள் மூர்க்கத்தனமாக சாலைகளில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து போகிறார்கள். மேலும் அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. இவை அனைத்தையும் மீறி வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் மாடுகளை கட்டி வைத்து பராமரிக்கும் கால்நடை வளர்ப்போர் அதன் கழிவுகளை அப்பறப்படுத்தாமல் அங்கேயே விட்டுச்செல்வதும், பல நேரங்களில் வைகை ஆற்றில் கொட்டி விடுவதும் வாடிக்கையாகி விட்டது. பல்வேறு வரலாற்று சிறப் புகளை கொண்ட வைகை ஆறு இன்று குப்பைகளை கொட்டும் இடமாக மாறிவருவது பொது மக்களை கவலை அடைய செய்துள்ளது. சித்திரை திருவிழா நடைபெறும் காலங்களில் மட்டும் வைகை ஆற்றை போற்றி பாதுகாத்தால் போதாது, காலம் முழுக்க அதனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கால் நடை வளர்ப்போர் தென் கரை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கக்கூடாது என்றும், மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் அதனை பின்பற்றாமல் தங்களுடைய செயல்பாடுகளை கால்நடை வளர்ப் போர் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளையும் பறிமுதல் செய்து, அதனை வளர்ப்போருக்கு அபராதம் விதிப்பதையும் மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்பதும் ஒட்டுமொத்த மதுரை மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை