பிரதமரின் வீட்டு வசதித்திட்டம் -நகர்ப்புறம் ..

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஜூன் 2015 முதல் ‘அனைவருக்கும் வீடு’ இயக்கத்தின் கீழ் பிரதமரின் வீட்டு வசதித்திட்டம் -நகர்ப்புறம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தகுதி வாய்ந்த அனைத்து நகர்ப்புற பயனாளிகளுக்கும் அடிப்படை குடிமை வசதிகளுடன் கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை வழங்குவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மூலம் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவுகிறது. 25.06.2015 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டு வந்த பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் செயல்பாட்டுக் காலம் பின்னர் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் கட்டுவதற்கான எந்த இலக்கையும் மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை. வீட்டுவசதியின் உண்மையான தேவையை மதிப்பிடுவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பி.எம்.ஏ.ஒய்-யு இன் கீழ் தேவை கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளன, மேலும் 112.24 லட்சம் வீடுகளின் தேவையைப் பதிவு செய்துள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பித்த திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், 10.07.2023 நிலவரப்படி 118.90 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பளிக்கப்பட்ட வீடுகளில், 112.22 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன அவற்றில், 75.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ரூ.2.00 லட்சம் கோடி (தோராயமாக) மத்திய அரசு வழங்கிய உதவியில், இதுவரை ரூ.1.47 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் (2020-21 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை) கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையின் மாநில / யூனியன் பிரதேச வாரியான விவரங்கள் இணைப்பில் உள்ளன.

விரிவாக்கப்பட்ட திட்ட காலத்திற்குள் அதாவது 31.12.2024 வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் கட்டி முடிக்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்தும் நிலையை அமைச்சகம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறது.

முந்தைய வெளியீடுகளின் பயன்பாடு மற்றும் திட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு போதுமான மத்திய உதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஆண்டு வாரியாக ஒதுக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு:

நிதி ஆண்டு
பட்ஜெட் ஒதுக்கீடு (கோடியில்)
2020-21 – 21,000.00
2021-22 – 27,023.97
2022-23 – 28,000.00

இத்தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் கௌஷல் கிஷோர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.