அல்டிமேட் டேபிள் டென்னிஸ் : சென்னை, டெல்லி அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் – தபாங் டெல்லி டிடிசி அணிகள் மோதின. இந்த மோதலில் டெல்லி தபாங் அணி 9-6 என்ற கணக்கில் சென்னை லயன்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன் 3-0 (11-10, 11-3, 11-6) என்ற செட் கணக்கில் சென்னை லயன்ஸ் அணியின் ஷரத் கமலை தோற்கடித்தார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் யாங்ஸி லியு 2-1 (11-8, 8-11, 11-8)என்ற கணக்கில் டெல்லி அணியின் ஸ்ரீஜா அகுலாவை வீழ்த்தினார்.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் டெல்லி அணியின் சத்தியன், பார்போரா ஜோடி2-1 (11-7,11-6,7-11) என்ற கணக்கில் சென்னை அணியின் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடியை தோற்கடித்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் பெனடிக்ட் டூடா 3-0 (11-8, 11-6, 11-7) என்ற கணக்கில் டெல்லி அணியின் ஜான் பெர்சனை வீழ்த்தினார்.

கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் டெல்லி அணியின் பார்போரா 2-1 (11-6, 4-11, 11-9) என்ற கணக்கில் சென்னை அணியின் பிராப்தி ஷெனை வென்றார். இந்த ஆட்டத்தின் முடிவில் தபாங் டெல்லி 42 புள்ளிகளுடனும், சென்னை லயன்ஸ் 41 புள்ளிகளுடனும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.