என்எல்சி விவகாரம் – அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டம்…

என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் இடங்களை விட்டுக் கொடுக்க முடியாது. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். கடலூர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டனர். அப்போது பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “டெல்லியில் போய் போராடிய தமிழ்நாட்டு விவசாய சங்கங்கள் கடலூர் மக்களுக்காக களத்திற்கு இன்னும் வராதது ஏன்? கதிர் வரும் வயலை அழிப்பது வயிற்றில் உள்ள கருவை அழிப்பதற்கு சமம். கடலூர் மாவட்ட மக்களுக்கும் , மண்ணுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்எல்சி.

என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் இடங்களை விட்டுக் கொடுக்க முடியாது. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்சினை இல்லை. இது தமிழ்நாட்டின் பிரச்சனை. இது நமது உரிமைக்கான பிரச்சனை. 5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை. விவசாய பட்ஜெட்; ஒரு பக்கம் ஒரு பக்கம் விவசாய நிலம் பிடுங்கப்படுகிறது. நிச்சயம் இதை விடமாட்டேன். விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது விலையை கொஞ்சம் ஏற்றி என்எல்சி கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நான் கேட்கிறேன் அவர் ஊரில் வைத்துள்ள 200 ஏக்கரை அரசு அதிக விலை கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா? என்றும், திருச்சியில் வேளாண் சங்கமத்தை தொடங்கி வைத்து விட்டால் விவசாயிகளை, நிலங்களை காப்பாற்றி விட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். இந்த மாவட்ட அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் எங்கே? இப்படியே போனால் திமுக டெபாசிட் கூட வாங்க முடியாது. என்எல்சி மின்சாரம் கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு இருண்டு போய்விடுமா? என்றும், ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீதும், மண் மீதும் அக்கறை இல்லை” என்றும் பேசினார்.

அனுமதியின்றி என்எல்சி நிறுவனத்திற்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர். தடுப்புகளை மீறி போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.