சென்னை:
சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
ஊழலை சுட்டிக்காட்ட அ.தி.மு.க. எப்போதும் தவறியது இல்லை. ஊழலை சுட்டிக்காட்டும் கடமையை நாங்களும் செய்கிறோம், அண்ணாமலையும் செய்கிறார். ஊழலுக்கு எதிராக அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வது, அவரது கட்சியை வளர்க்க செல்கிறார். அண்ணாமலை அவரது கடமையை செய்கிறார்.
பொழுது போக்கிற்காக கோடநாடு விவகாரத்தை, கையில் எடுத்து ஓபிஎஸ் போராட்டம் நடத்துகிறார். ஓ.பி.எஸ்&-டிடிவி தினகரன் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டி. அச்சாணி இல்லாத வண்டியை டிடிவி தினகரன் ஓட்டுகிறார்; அது ஓடாது. ஊழலை பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு தற்போதும் கூடுதல் தொகை வசூலிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






