‘உணவகங்களில் புகைப்பிடிக்க தடை’ – அரசிதழ் வெளியீடு

சென்னை:
தமிழகத்தில் உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) திறக்க தடை விதித்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து ஹுக்கா பார்களுக்கு தடை மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) திறக்க தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றிய நிலையில், தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி புகைக்குழல் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை, ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில்,- புகைக்குழல் கூடத்தினை தடை செய்தல்- சட்டத்தில் அடங்கியிருப்பது எவ்வாறிருப்பினும், நபர் எவரும், அவருக்குச் சொந்தமாகவோ அல்லது பிற நபர் எவரின் சார்பாகவோ, உணவுக் கூடம் உள்ளடங்கலான எந்த இடத்திலும், புகைக்குழல் கூடம் எதனையும் திறக்கவோ அல்லது நடத்தவோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு புகைக்குழலினை வழங்கவோ கூடாது.
– “உணவுக்கூடம்“ என்பது உணவு அல்லது சாராயம், மது, கோதுமைச் சாராயம் அல்லது பிற தானியவகையிலான மதுபானங்களை உள்ளடக்காதச் சிற்றுண்டி வகை எதனையும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றதும் நுகர்வுக்காக விற்கப்படுகின்றதுமான இடம் எதுவும் என்று பொருள்படும். மாநில அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட, உதவி ஆய்வாளர் படிநிலைக்குக் குறையாத, காவல்துறை அலுவலர் எவரும், 4கிம் பிரிவின் அந்த வகை முறைகளானவை மீறப்படுகிறது என நம்புவதற்கான காரணத்தைக் கொண்டிருந்தால், புகைக்குழல் கூடத்தின் உட்பொருளாகவோ அல்லது துணைப் பொருளாகவோ பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் அல்லது பொருள் எதனையும் அவர் கைப்பற்றலாம்.
வகைமுறைகளை மீறுகிறவர் எவரும், ஓர் ஆண்டிற்கு குறையாத ஆனால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படவாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத் தண்டனையும் இருபதாயிரம் ரூபாய்க்குக் குறையாத ஆனால் ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65