சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு 67க்கு உட்பட்ட ஜி.கே.எம். காலனி பிரதான சாலையில் மூலதன நிதி ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பருவமழைக்கு முன்னதாக அனைத்து பணிகளையும் விரைந்து முறையாக முடிக்க அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, இணை ஆணையர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான் (மத்திய வட்டாரம்), திரு.வி.க.நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், மண்டல அலுவலர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

சட்டப் பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரை
தமிழக சட்டமன்றத்தில் `வணக்கம்’ எனக்கூறி உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேகர் தமிழக வெற்றிக்






