நிலவை நெருங்கியது சந்திராயன் 3: சுற்றுவட்டப்பாதை உயரம் 4வது முறையாக குறைப்பு

புதுடெல்லி:
சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. புதுடெல்லி, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது.
வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு, சந்திரயான் -3 விண்கலம் நிலவு சுற்றுப்பாதை யில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அதன் சுற்றுப்பாதை தொலைவு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 முறை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 153 * 163 கி.மீ. ஆக நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் இன்று பிரிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்