மகளிர் உரிமைத்தொகை – அஞ்சல் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடு…

தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன்பெறலாம்.

மேலும், தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி e-KYC (விரல் ரேகை மூலம்) மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்க முடியும். இந்தக் கணக்கிற்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது (Zero Balance Account).

தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமை தொகையை, அருகில் உள்ள அஞ்சலகங்களிலும், DOOR STEP BANKING என்ற சிறப்பு சேவையின் வாயிலாகவும் தங்கள் இல்லங்களிலேயே தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டப் பயனாளிகள், பிரதமரின் கிசான் திட்டப் பயனாளிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நலவாரிய உதவித்தொகை, பெறும் பயனாளிகளும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு துவங்கி பயன் பெறலாம்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான வங்கியாகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அணுகுவதற்கு எளிதான. குறைந்த கட்டணங்களுடன், நகரங்கள் மற்றும் வங்கிகள் இல்லாத கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு எளிய முறையில் வங்கிச் சேவை அளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது.

எனவே, பயனாளிகள் அனைவரும் அஞ்சல் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிச் சேவையை பயன்படுத்தி, தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்கி பயனடையுமாறு தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட