குட்டிநாடான ஜப்பானில் புதிதாக 7 ஆயிரம் தீவுகள் கண்டுபிடிப்பு..!!

டோக்கியோ:
அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் குட்டி நாடான ஜப்பானில் புதிதாக 7 ஆயிரம் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மிகவும் வித்தியாசமான நாடு ஜப்பான். அங்கு சுனாமி, நில நடுக்கம் சர்வ சாதாரணமாக ஏற்படும். அதிகப்படியான எரிமலை வெடிப்புகளும் என இயற்கை சீற்றங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பு பேரழிவுகளின் தாக்கம் மறுபுறம் என வாழ்நாள் முழுவதும் சவால்களை சந்தித்துவரும் ஜப்பானியர்கள் உழைப்பால் உயர்ந்திருக்கிறார்கள்.
சமவெளிகள், மலை முகடுகள். நீர் பரப்பு என அனைத்தையும் சரிவர பெறப்பட்ட நாடுகளை விட இயற்கை பேரிடர்களை அதிகம் சந்திக்கும் ஜப்பான் போன்ற குட்டி நாடுகளுக்கு. மனித குலம் வாழத்தேவையான நிலப்பரப்பு என்பது இன்றியமையாதது.
இந்த பின்னணியில் ஜப்பானியர்களுக்கு தித்திக்கும் செய்தியாக வந்துள்ளது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 7 ஆயிரம் தீவுகள். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜப்பான் கடலோரக் காவல் படையின் கணக்கெடுப்பின்படி அந்நாட்டில் அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் இருந்த தீவுகளின் எண்ணிக்கை 6852. அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 97 சதவீதம் 4 பெரிய தீவுகளால் ஆனது. ஜப்பானியர்கள் தீவுகளை தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிட்டு பயன்படுத்துகின்றனர்.‘
விமான நிலையங்கள் சமவெளிகளில் இருப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஜப்பானில் கன்சாய் மாகாணத்தில் ஒசாகா கடல்பகுதியில் உள்ள ஒரு தீவில் ஜப்பானியர்கள் பன்னாட்டு விமானநிலையத்தையே கட்டமைத்துள்ளனர். 1994 ஆம் ஆண்டு முதல் இந்த பன்னாட்டு விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது. தீவுகளை வர்த்தக ரீதியாக வளர்த்தெடுக்க கடலுக்கு அடியில் தீவுகளை இணைக்கும் பாலம், கடலுக்கு அடியில் டியூப் ரயில், தொழிற்சாலைகள். வானுயர்ந்த கட்டங்கள் என சாதனை படைத்து வருகின்றனர்.
ஜப்பானியர்களின் வாழ்வில் தீவுகள் இத்தனை முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில் அந்நாட்டின் ஜி.எஸ்.ஐ. எனும் அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி புதிதாக 7 ஆயிரம் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறது ஜப்பான் அரசு. தீவுகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டம் போட தொடங்கிவிட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.