ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் அதிபராக மோடி சதி திட்டம் தீட்டுகிறார்: தமிழக முதல்வர்

சென்னை,
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதி திட்டத்தை தீட்டி அதிபராக இருக்க முயற்சி செய்கிறார்கள். தான் அதிபராக வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு செயல்படுகிறார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களை பார்த்து பயந்து போய் நாடாளுமன்றத்தை பாஜக அரசு கூட்டியுள்ளது. திமுக குடும்பமாக செயல்படுவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதி திட்டத்தை தீட்டி அதிபராக இருக்க முயற்சி செய்கிறார்கள். தான் அதிபராக வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு செயல்படுகிறார். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்துவிட்டு தற்போது ஆதரிக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக ‘பலி கடா’ ஆகும், அது புரியாமல் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியா கூட்டணி என்றாலே பாஜகவுக்கு அச்சம் வந்துவிடுகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவில் அனைத்து கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ, இல்லையோ கொள்ளையடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். சட்டசபையில் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் காத்திருப்பீர்களா?. கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகம்.. இது தான் அண்ணா கண்ட திமுக. யாரின் காலிலும் விழுந்து பதவி பெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தை காப்பாற்றியது போல, நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.