நம் உடலில் சிறுநீரகத்தின் வேலை என்பது மகத்தானது. அதை கண்டுகொள்ளாமல் இருப்பது நமக்கு மிகப்பெரும் பின் விளைவுகளை உண்டாகும். அப்படி கவனிக்காமல் விட்டுதான் இன்று நாட்டில் பெரும்பான்மையான மக்கள் சிறுநீரக பாதிப்புகளால் அவதி படுகிறார்கள். நாள்பட்ட சிறுநீரக நோய் பொதுவாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது சிறுநீரக நோய்களின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களிடையே அதிகம் உள்ளனர். அதைத் தவிர மற்ற காரணத்தினாலும் அதாவது வயது முதிர்வு, குறைந்த எடை, சில மருந்துகளை நீண்ட காலம் உபயோகித்தல், நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக கற்கள் மற்றும் உடல் பருமன் ஆகியவையும் அடங்கும். அப்படி நீங்களும் சமீப நாட்களாக பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் எனில் எந்த சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? சிறுநீரக நோயின் ஏழு பொதுவான அறிகுறிகள் இங்கே.
சரியாக தூக்கம் இல்லையா ? சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பொதுவான அறிகுறியாக இருக்கிறது. காரணம் சிறுநீரகமானது சரியான முறையில் நச்சுக்களை வடிகட்ட முடியாமல் போனால் அவை இரத்தத்தில் கலந்து தங்கிவிடுகின்றன. இதனால் சிறுநீரகம் வழியாக வெளியேர முடியாமல் அவை இரத்ததிலேயே தங்குவதால் தூக்கமின்மை பிரச்னை வருகிறது. இது உலக அளவில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் பொதுவான அறிகுறியாகும்.
சருமம் பாதிப்புகள் ஏற்படும் : நீங்கள் சமீப நாட்களாக சரும பிரச்னைகளை அதிகம் எதிர்கொள்கிறீர்கள் எனில் அதற்கு சிறுநீரகம் பாதிப்பு காரணமாக இருக்கலாம். சருமத்தில் கடுமையான வறட்சி, அரிப்பு போன்றவை நீரிழப்பு மற்றும் எலும்பு பாதிப்புகளை உணர்த்தும் அறிகுறிகளாகும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டாலும் இந்த அறிகுறிகள் முக்கியமாக கருதப்படுகிறது. ஊட்டச்சத்துக்களை சரியாக பிரித்து சமநிலை செய்ய முடியாமல் போவதால் இரத்தத்தில் நச்சுகளை உண்டாக்கி அவை சருமத்தில் வெளிப்படும்.
கண்கள் வீங்க்கம் : சிறுநீரக நோய்கள் பெரியோர்பிடல் எடிமாவை (periorbital edema) ஏற்படுத்தும், இது கண்களைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்தும். கண்களைச் சுற்றியுள்ள இந்த வீக்கம் சிறுநீரகத்திலிருந்து அதிக அளவு புரதத்தை உடலில் வைத்திருப்பதற்கு பதிலாக சிறுநீர் வழியாக வெளியேற்றுவதன் காரணமாக இருக்கலாம். இந்த அறிகுறி ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் உருவாகலாம்.
சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பு இயல்பான ஒன்று. உடலில் உள்ள திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி பிடிப்புகள் ஏற்படுகின்றன. பிடிப்புகள் நரம்பு சேதம் மற்றும் இரத்த ஓட்ட பிரச்சனைகளாலும் ஏற்படுகின்றன. பலவீனமான சிறுநீரக செயல்பாடு காரணமாகவும் இருக்கலாம். உடலில் குறைந்த கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவுகளும் தசைப்பிடிப்பை உருவாக்குகின்றன.
கணுக்கால்களில் வீக்கம் ஏற்படுதல் : உங்கள் கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் இருப்பதை சற்று கவனித்து பாருங்கள். ஆம் என்றால், அது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். வீக்கத்தை குறைக்க சூப் மற்றும் தயிர் போன்ற உணவுகளை சாப்பிடலாம். சில நேரங்களில் சிறுநீரகங்கள் கூடுதல் திரவத்தை அகற்ற முடியாமல் போகும்போது, அது சில நேரங்களில் கால்கள், கணுக்கால், பாதங்கள் மற்றும் கைகளில் வீக்கத்தை உண்டாக்குகிறது.
சிறுநீர் கழிப்பதில் மாற்றம் : சிறுநீரகங்கள் சிறுநீரை உருவாக்குகின்றன என்பது அனைவரும் தெரிந்த விஷயம். எனவே உங்கள் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, சிறுநீர் வெளியேற்றுவதில் மாற்றம் உருவாகலாம். சிறுநீர் கழிக்க அடிக்கடி தூண்டுவது சிறுநீரக நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தால், சிறுநீரக நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.சிறுநீரக வடிகட்டிகள் சேதமடைந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க தூண்டும். பசியின்மை அல்லது பசி தூண்டுதல் : பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளோமருலர் வடிகட்டுதல் அளவு குறைவதன் காரணமாக உணவு உட்கொள்ளலில் மாற்றம் நிகழ்கிறது. குறிப்பாக கடுமையான பசி மற்றும் எடை இழப்பு ஆகியவை சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
தவிர்ப்பது எப்படி ? : உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள் மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள் . முழு தானியங்கள்,பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் சமச்சீர் உணவை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரியுங்கள்..
ஜங்க் ஃபுட், காரமான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிடுங்கள். ஆல்கஹால் மற்றும் புகைபிடிப்பதை நிறுத்துங்கள். புகைபிடிப்பதால் இரத்த நாளங்கள் அழியும், இது சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தை குறைக்க வாய்ப்புள்ளது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்த ஒரு மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.






