ஜி20 உச்சி மாநாடு – மோடி சந்திப்பு பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி !

இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு முடிவடைந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லியிலிருந்து தனது வியட்நாம் பயணத்தை தொடங்கினார். வியத்நாம் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ‘மனித உரிமைகளை காப்பது’ மற்றும் ‘பத்திரிக்கை சுதந்திரம்’ போன்ற பிரச்னைகள் குறித்து தான் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின்போது, ஏராளமான மனித உரிமை அமைப்புகள், இந்தியாவில் மனித உரிமை மீறல் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து போர்க்கொடி எழுப்பி அது குறித்து ஜோ பைடன் பேச வலியுறுத்தியிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தகவலை வெளியிட்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் உள்ளதாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில், பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் ஜோ பைடனும் அரிதிலும் அரிதாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த நிகழ்வின்போது, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகை நிருபர் எழுப்பிய கேள்விக்கு, இந்தியாவில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்திருந்தார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு, கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகை நிருபரை குறிவைத்து, ஆளும் பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமரிசித்திருந்தனர். இந்த செயலுக்கு, வெள்ளை மாளிகை தனது கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது, ஜனநாயகக் கொள்கைளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில்தான், செப்டம்பர் 8ஆம் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் விருந்தளித்திருந்தார். “நான் எப்போதும் செய்வது போல், மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வலுவான மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதில் பொதுச் சமூகம் மற்றும் சுதந்திரமான பத்திரிகைகளின் முக்கிய பங்கையும் மோடியிடம் நான் உணர்த்தினேன்” என்று வியட்நாமில் ஜோ பிடன் கூறினார்.

ஆனால், பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜோ பைடன் இடையேயான சந்திப்பின்போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையில், மனித உரிமைகள் குறித்த விவாதம் குறிப்பிடப்படுவதை மத்திய அரசு தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.