‘‘இந்தியாவில் கற்றல்” என்ற பயிலரங்கை புதுதில்லியில் இன்று நடைபெறுகிறது !

மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை, இந்திய கல்வி ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து, தில்லியில் உள்ள, ஏ.ஐ.சி.டி.இ., அரங்கில், இந்தியாவில் கற்றல்’ என்ற பயிலரங்கை நடத்தியது. பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியவற்றின் அனைத்து பங்குதாரர்களுக்கும் எஸ்ஐஐ இணையதளத்தின் (ஸ்டடி இன் இந்தியா) செயல்பாடுகள் மற்றும் அதை இயக்குவதில் அவர்களின் குறிப்பிட்ட பங்குகள் குறித்து அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கூட்டாக 2023 ஆகஸ்ட் 3 ஆம் தேதி புதுதில்லியில் உயர்கல்வி முயற்சிகளின் சர்வதேசமயமாக்கலின் ஒரு பகுதியாக இந்த இணையதளத்தை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் படிக்க விரும்பும் எந்தவொரு மாணவருக்கும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் செயல்முறையை எளிதாக்குவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைக் கொண்டு வர ஸ்டடி இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது என்று கூறினார்.

கான்பூர் ஐ.ஐ.டி.யின் இயக்குநர் திரு அபய் கரண்டிகர் பேசிய போது, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் முயற்சிகளையும் தலைமையையும் பாராட்டினார், இந்த தனித்துவமான முன்முயற்சி உயர் கல்வியின் சர்வதேசமயமாக்கலின் நோக்கங்களை வெற்றிகரமாக அடையும் என்றும் மாணவர்கள் மற்றும் கற்போரின் விருப்பங்களை நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார்.

தேசிய கல்வித்தொழில்நுட்ப அமைப்பின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே உரையாற்றிய போது, ”மாணவர்கள், இந்தியாவின் உலகளாவிய பிரதிநிதிகளாக உருவெடுப்பார்கள்; உயர்கல்வி ஆராய்ச்சிக்கான முக்கிய இடமாக, நாட்டை முன்னிறுத்துவோம்,” என்றார்.

இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், கல்வி அமைச்சகம், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 500 அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஸ்டடி இன் இந்தியா திட்டத்தில் இளநிலை (யுஜி), முதுநிலை (பிஜி), முனைவர் மற்றும் பிற குறுகிய கால திட்டங்களில் 100,000 இடங்கள் உள்ளன, இதில் 2,600-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. உயர்கல்வியின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்த இந்த முயற்சி கணிசமாக பங்களிக்கும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.