வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு: விலை சரிவால் விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளனர். குறிப்பாக கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தக்காளி, கத்தரிக்காய், வாழை, முள்ளங்கி, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெண்டைக்காய் சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பர்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி மோகன் கூறும்போது, நிகழாண்டில் எங்கள் பகுதியில் பரவலாக பெய்த மழையால், இப்பகுதியில் விவசாயிகள் பலர் நிலக்கடலை மற்றும் வெண்டைக்காய் சாகுபடியை செய்துள்ளனர். வெண்டைக்காய் விதையை விதைத்த 40 நாட்களில் அறுவடைக்கு தயாராகிறது. இதில் பூச்சி தாக்குதலைத் தடுக்க விதைத்த 20 நாட்களுக்குப் பிறகு ஒரு முறை மட்டும் டிஏபி உரம் தெளிக்க வேண்டும். 3 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். தினசரி 3 மாதங்களுக்கு வெண்டையை அறுவடை செய்யலாம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.40 முதல் 45 வரை விலை போனது. ஆனால் தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால் தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ.15 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது. இதனால் எங்களுக்கு விதைப்பு முதல் அறுவடை செய்து சந்தைகளுக்கு கொண்டு செல்ல ஏற்படும் செலவு தொகை கூட கிடைப்பதில்லை. மகசூல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. வெண்டைக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400