ஜாம்ஷெட்பூர்:
இந்திய வலுதூக்குதல் சம்மேளனம் சார்பில் தேசிய சீனியர், சப்- ஜூனியர் வலுதூக்குதல் போட்டி ஜாம்ஷெட்பூரில் 3 தினங்கள் நடைபெற்றன. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழக அணிக்கு 2 பதக்கம் கிடைத்தது. சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார். சீனியர் 59 கிலோ பிரிவில் நந்தகோபால் வெண்கல பதக்கம் வென்றாா். பதக்கம் வென்ற இருவரையும் தமிழ்நாடு வலுதூக்குதல் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்க செயல் தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






