தொடர் விடுமுறை: ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை:
மிலாடி நபி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் தங்கி பணியாற்றி வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகினர். இதற்காக சென்னையில் இருந்தும் மக்கள் வெளியூர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர் விடுமுறையால் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நோக்கி மக்கள் படையெடுத்தனர். அரசு விரைவு பஸ்கள் மற்றும் மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கும்பகோணம், சேலம் போக்குவரத்து கழகங்களின் பஸ்களில் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர்.
நேற்று மாலையில் முதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் கூடத் தொடங்கியது. இரவு நேரம் கூட்டம் மேலும் அதிகரித்தது. நள்ளிரவு 1 மணி வரை வெளியூர் சென்ற மக்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களை ஏற்பாடு செய்தனர். முன்பதிவு இல்லாமல் 1 லட்சம் பேர் அரசு பஸ்களில் மட்டும் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்கள் மூலம் சென்றுள்ளனர். பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. மேலும் வருகிற சனி, ஞாயிறு, திங்கட்கிழமை 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. தென்மாவட்ட ரெயில்களில் இடங்கள் இல்லாததால் அரசு பஸ்களில் மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் தேவையான அளவு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன. நாளை பயணம் செய்ய 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நாளைய பயணத்திற்கு நிரம்பிவிட்டன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.