புதுதில்லியில் நாளை குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மேலாண்மை தொடக்க தேசிய நிகழ்வு

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இரானி தலைமையில் , மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் முஞ்சபாரா மகேந்திரபாய், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர்கள் முன்னிலையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்க்கும் மேலாண்மைக்கான நெறிமுறைகள்’ நாளை விஞ்ஞான் பவனில் தேசிய நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

நாடு முழுவதிலுமிருந்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். யுனிசெஃப், இந்திய மருத்துவ சங்கம், சர்வதேச குழந்தை மருத்துவ சங்கம், இந்தியக் குழந்தை மருத்துவ அகாடமி, உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி மற்றும் பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை போன்ற முக்கிய சர்வதேச மற்றும் பிற அமைப்புகளின் பிரமுகர்கள் மற்றும் வல்லுநர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள், பெண் மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வின் போது, குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைத் தவிர்ப்பதில் முன்மாதிரியான அர்ப்பணிப்பைக் காட்டிய பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கௌரவிக்க உள்ளார்.

ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது ஒரு சிக்கலான சவாலாகும், இதை களைவதற்குக் கூட்டு நடவடிக்கை தேவைப்படுகிறது. இந்த இலக்கை நோக்கி, விரும்பிய முடிவுகளை அடைய ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு சிகிச்சையளித்தல் ஊட்டச்சத்து இயக்கம் 2.0-ன் ஒருங்கிணைந்த அம்சமாகும். அங்கன்வாடி மையங்கள் மற்றும் சமூகங்களுக்குள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும் நிர்வகித்தல், மற்றும் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்களுக்கு அல்லது மருத்துவ உதவிக்கு எப்போது பரிந்துரைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது ஆகியவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் அம்சங்களாகும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.