காவல் நிலையத்தில் பெண் விஷம் சாப்பிட்டு தற்கொலை – மாஜிஸ்திரேட் விசாரணை !

கோவை: குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவையில் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் நேரில் விசாரணை நடத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்து ராஜ். இவர் குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றபோது, ஒன்றரை வயது மகன் ஹரிஷை பெண் ஒருவர் கடத்திச் சென்று விட்டார். இது குறித்து திருச்செந்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

அதில், குழந்தையை கடத்திச் சென்றது சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாண்டியன்(45), அவரது மனைவி திலகவதி(40) ஆகியோர் எனத் தெரியவந்தது. கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள பூண்டியில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த குற்றவாளிகள் இருவரையும் கோவை காவல்துறையினரின் உதவியுடன் திருச்செந்தூர் காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பின்னர், இருவரையும் ஆலாந்துறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது மயக்கமடைந்த திலகவதி உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலாந்துறை போலீஸார், காவல் நிலைய மரணம் பிரிவில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த திலகவதியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல் விசாரணையின் போது, திலகவதி உயிரிழந்ததால், அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து அறிய ஜே.எம்.5 மாஜிஸ்திரேட் சந்தோஷ் நேற்று ஆலாந்துறை காவல் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த காவலர்களிடம் விசாரித்தார்.

அரசு மருத்துவமனைக்கும் நேரில் சென்று விசாரித்தார். தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் திலகவதியின் சடலத்துக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. திலகவதியின் உடலில் காயங்கள் ஏதாவது உள்ளதா எனவும் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார். பிரேதப் பரிசோதனை முடிந்து திலகவதியின் உடல் அவரது உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே, திலகவதி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திலகவதி, காவலர்கள் பார்க்காத போது, தான் மறைத்து எடுத்துச் சென்ற விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் கூறினர்.

பொடி வகையிலான விஷத்தை அவர் சாப்பிட்டிருக்கலாம் என்பதை அறிந்த காவல்துறையினர், அது எந்த வகையிலான விஷம் என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், திலகவதி மீது சேலம் காவல் நிலையங்களில் ஏற்கெனவே திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே, கைதான பாண்டியன் விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவிப்பதாகவும், திருச்செந்தூரில் கடத்திய குழந்தையை சேலத்தில் உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு, கோவைக்கு மற்றொரு குழந்தையை கடத்துவதற்காக வந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.