சிங்கப்பூரை கலக்கமடைய செய்யும் கொரோனா! – கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் லீ…!

சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந் நிலையில், பிரதமர் லீ சியன் லூங், கொவிட்-19க்கு எதிரான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். மக்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், அண்மையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட மேம்படுத்தப்பட்ட புதிய தடுப்பூசியை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் போட்டுக்கொண்டுள்ளாா். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி , ஓமிக்ரான் XBB 1.5 கிருமியின் திரிபு அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது எனறார்.

தான் தடுப்பூசி போட்டுக்கொண்டதைப் போல், முன்னதாக கோவிட்-19 வைரஸ் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர், இந்த மேம்படுத்தப்பட்ட புதிய தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். அடுதடுத்த நோய் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்த மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்வது கட்டாயம் என கூறினார்,

மேலும், இந்த புதிய தடுப்பூசியை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள், மருத்துவரீதியாக எளிதில் பாதிக்கப்படும் சூழ்நிலையில் உள்ளவர்கள், ஆகியோர் தடுப்பூசியை தவறாமல் போட்டுக்கொள்ள பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட