முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்கு – எடப்பாடி கடும் கண்டனம் !

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவருமான ஆர். நடராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;-

தி.மு.க. ஆட்சியாளர்கள் அதிமுக ஐடி பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒருசில தொலைகாட்சிகள் மீது பொய் வழக்குகள் போடுவது, கடந்த 30 மாத தி.மு.க. ஆட்சி குறித்தும், முதலமைச்சர் முதல் அமைச்சர்களின் வரையிலானவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளைப் பிரதிபலித்த காவல்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு தேர்வாணய குழு முன்னாள் தலைவரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் மீது, தமிழக அரசு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த திமுக அரசின் இந்த போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே காட்டுகிறது.

காவல்துறை முன்னாள் தலைவர் மற்றும் தனியார் செய்தி சேனல் தொலைக்காட்சி மீது புனையப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்கு – எடப்பாடி கடும் கண்டனம் !