ராகுல் காந்தியின் “எக்ஸ்” கணக்கை முடக்கி வைக்க பாஜக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்…

இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்து வரும் இந்த நேரத்தில் பாஜக அரசு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் (ட்விட்டர்) கணக்கை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இன்று ஒரே கட்டமாக 199 தொகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடந்தது வருகின்றது. இது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. காலை ஏழு மணி முதல் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

மொத்தம் 200 தொகுதிகள் கொண்ட இந்த தேர்தலில், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் இறந்த நிலையில் அந்த தொகுதியில் நடக்கவிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. மேலும் டிசம்பர் 3ம் தேதி இந்த தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தை முடக்குமாறு ராஜஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை தற்பொழுது எழுதியுள்ளது பாஜக. அந்த கடிதத்தில் “தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரச்சாரங்கள் மற்றும் பிற தேர்தல் சார்ந்த விஷயங்களை அந்தந்த கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது தான் தேர்தல் ஆணைய வழக்கமான விதி”.

“ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த விதி பின்பற்றாமல் இன்று காலை வெளியிட்ட அவரது ட்விட்டர் பதிவில் ராஜஸ்தான் மாநிலத்தில் செய்யப்படவுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து ஒரு பதிவை அவர் போட்டுள்ளார். மேலும் “மக்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் உத்தரவாதம் அளிக்கும் காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுங்கள்” என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். எனவே இது தேர்தல் விதி மீறல் என்று கூறி, உடனடியாக அவருடைய எக்ஸ் (ட்விட்டர்) தளத்தை முடக்க வேண்டும் என்றும் பாஜக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தியின் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தை முடக்க பாஜக தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.