இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு—41, கொருக்குப்பேட்டை கண்ணாம்பு கால்வாய் சாலையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பல்வகை விளையாட்டுகளை உள்ளடக்கிய விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து வரைபடத்தினைப் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மேயர் ஆர்.பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.நேயினோர் (ஆர்கேநகள்), ஜட்ரீய ஆர்சமூர்த்தி இராயபுரம்), ஆர்.டி.சேகர் (பெரம்பூர்), துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர். ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், மண்டலக்குழுத் தலைவர் நேதாஜி யு. கணேசன், வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, நிலைக்குழுத் தலைவர்கள் தா.இளைய அருணா (நகரமைப்பு), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு (ம) நிதி), மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





