பார்கிங் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால் 1913-ல் புகார் செய்யுங்கள் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு !

பெருநகர சென்னை மாநகராட்சி, சீர்மிகு நகர சிறப்பு திட்டத்தின்படி வாகன நிறுத்த மேலாண்மையில் ஒப்பந்த அடிப்படையில் வாகன நிறுத்தம் தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக தனியார் நிறுவனம் மூலம் வாகன நிறுத்தத்திற்கான கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டு, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன
நிறுத்தத்திற்கான இடங்களை கண்டறிந்து, தனியார் சேவை நிறுவனத்தின் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்த கட்டணமாக 4-சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20/- எனவும், 2-சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5/- எனவும், தியாகராய நகரில்
உள்ள பன்னெடுக்கு வாகன நிறுத்தம் உட்பட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், பாண்டி பஜார் சாலையில், வாகனம் நிறுத்தத்திற்கு சிறப்பு கட்டணமாக 4-சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.60/- எனவும், 2-சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.15/-எனவும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, அனுமதிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டண வரம்பைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும், @chennaicorp என்ற X வலைதளத்திலும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யலாம் என
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட