ஏரிகளில் வளரும் கீரைகளை கொண்டு வருமானம் தேடும் விவசாயிகள் !

ஓசூர்:
ஓசூர் கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைப்புப்பணி தொய்வு அடைந்துள்ள நிலையில், பாசன பகுதியில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏரிகளில் முளைத்துள்ள பொன்னாங்கண்ணி கீரையைப் பறித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழக எல்லையில் உள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணை வழியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலந்துவிடுகிறது.

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 42.28 அடி. அணையின் வலதுபுறம் 22.6 கிமீ தூரமும், இடதுபுறம் 32.5 கிமீ தூரமும் உள்ளது. இதன் மூலம் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு அணை கால்வாய் மூலம் செல்லும் நீர் மூலம் ஏரிகள் நிரம்பி அப்பகுதி விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுகிறது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைக்கும் பணிக்காக அணையிலிருந்த மொத்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. தற்போது வரை சீரமைப்பு பணி நிறைவுபெறாத நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால், பாசனப் பகுதிக்கு நீர் கிடைக்காத நிலையில், சாகுபடி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வருமானமின்றி வேதனையில் தவிக்கின்றனர். இந்நிலையில், பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி ஆகிய பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஏரிகளில் வளர்ந்துள்ள பொன்னாங்கண்ணி கீரையைப் பறித்து, நகரப்பகுதியில் விற்பனை செய்து வருவாய் ஈட்டிவருகின்றனர்.

இது தொடர்பாக கெலவரப்பள்ளி அணை பாசன விவசாயிகள் சிலர் கூறியபோது: கெலவரப்பள்ளி அணை நீர் மூலம் பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி மற்றும் அனைத்து வகையான கீரைகளும் சாகுபடி செய்து வந்தோம். மதகு சீரமைப்புப் பணியால் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், எங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வேகமாக குறைந்தது.

பயிர்களுக்குப் போதிய தண்ணீர் இல்லாததால், சாகுபடி பணியைக் கைவிட்டு, அன்றாட செலவுக்கு வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். வறண்ட ஏரிகளில் வளர்ந்துள்ள பொன்னாங்கண்ணி கீரைகளைப் பறித்து விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம். எனவே, பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கெலவரப்பள்ளி அணை மதகு சீரமைக்கும் பணிக்காக அணையிலிருந்த மொத்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.