அமலாக்கத்துறை அதிகாரி கைது; சட்டம் தன் கடமையை செய்வதில் தவறில்லை: எடப்பாடி பழனிசாமி கருத்து

அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது, அதில் எந்த தவறில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-
அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்ச புகாரில் சிக்கியுள்ளார். எங்கு தவறு நடந்தாலும், யார் குற்றம் புரிந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும். சட்டப்பேரவை மசோதாக்களை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியது குறித்து உச்ச நீதிமன்றமே இறுதி தீர்ப்பு கொடுத்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகள், முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2024 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை 95 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த பின்பு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்