உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி இன்று தொடக்கம்: 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்பு

புதுடெல்லி:
13வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் இன்று தொடங்குகிறது. மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 2006 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடப்பது மூன்றாவது முறையாகும். போட்டியை தூர்தர்ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் 12 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக்கில் வெங்கலம் வென்ற லவ்லினா, நிகாத் ஹரின், நீது உட்பட 12 இந்திய வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்க உள்ள நிலையில், இந்தியா சார்பில் 12 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பில், நிது கங்காஸ் (48 கிலோ), நிகத் ஜரீன் (50 கிலோ), சாக்ஷி சவுத்ரி (52 கிலோ), ப்ரீத்தி (54 கிலோ), மனிஷா மவுன் (57 கிலோ), ஜெய்ஸ்மின் லம்போரியா (60 கிலோ), ஷஷி சோப்ரா (63 கிலோ), மஞ்சு பாம்போரியா ( 66 கிலோ), சனம்சா சானு (70 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), சவீட்டி பூரா (81 கிலோ) மற்றும் நுபுர் ஷியோரன் (81+ கிலோ) ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவர்களில் நிகாத் ஜரீன் கடந்த போட்டியில தங்கப்பதக்கமும், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நிது கங்காஸ், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா போர்கோஹைன் ஆகியோர் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400