முதல்வர், ஆளுநர் பிரச்சினை – உச்சநீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி:
தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என ஆளுநர் ஏன் எதிர்பார்க்கிறார் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது, முதல்வருக்கும் ஆளுநருக்கும்மிடையே சுமுக உறவு இருந்தால் தான் இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்படும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்கள், அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்ட கோப்புகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்துள்ளதாகவும், எனவே ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பை நிர்ணயம் செய்யக்கோரியும் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரை அழைத்துப்பேசி ஆளுநர் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததன் எதிரொலியாக ஆளுநர் கிடப்பில் கிடந்த 10 சட்ட மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார். அந்த மசோதாக்களை மீண்டும் மறுநிறைவேற்றம் செய்த தமிழக அரசு அவற்றை மீண்டும் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சட்டப்பேரவையி்ல் மறுநிறைவேற்றம் செய்து ஆளுநருக்கு இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுத்து ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும். அவற்றை குடியரசுத் தலைவருக்கு அவசரம் அவசரமாக பரிந்துரை செய்திருப்பது சட்ட விரோதமானது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அறிவுறுத்தல்களை வழங்கிய பிறகும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை எப்படி எடுத்துக்கொள்வது, எனவே இந்த மசோதாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையிலான இந்த பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என ஆளுநர் எதிர் பார்க்க கூடாது என தெரிவித்தார்.

ஆளுநர் தரப்பில் இருந்து சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம். எல்லாவற்றையும் நீதிமன்றமே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. முதல்வரும், ஆளுநரும் சந்தித்துப்பேசி இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மீண்டும் அறிவுறுத்துகிறோம். இவ்வாறு தெரிவித்தார். அப்போது இந்த விவகாரத்தில் ஆளுநரை சந்தித்துப்பேச தமிழக முதல்வர் தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்பதால் இதை அட்டர்னி ஜெனரல் கவனத்துக்கு விட்டுவிடுகிறோம் எனக்கூறி விசாரணையை ஜனவரி 3-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு இடையே நேற்று தமிழக ஆளுநர் கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் தற்போது மி்க்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய குழு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தி வருவதால் அந்தக்குழு சென்றதும் ஆளுநரை முதல்வர் சந்திக்க உள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.