நாடாளுமன்றத் தேர்தலில்  கடலூரில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், பிரசாரத்தின்போது கிளி ஜோதிடம் பார்த்தார். கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று இருந்தது. எனவே இதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், பின்னர் ஓட்டு கேட்க சென்றார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் என்பவரையும், அதே பகுதியில் கிளி ஜோதிடம் பார்த்த சீனுவாசன் என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.  வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த கைதுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதை தி.மு.க.வால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

கடும் எதிர்ப்பு காரனமாக தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த செல்வராஜ் மற்றும் சீனுவாசன் ஆகிய இரு ஜோதிடர்களையும் வனத்துறையினர் விடுவித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 கிளிகளைப் பறிமுதல் செய்த வனத்துறையினர், ஜோதிடர்களை எச்சரித்து விடுவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube