இந்தியா – ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

மும்பை:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி பார்டர் – கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இரு அணிகளும் மோதும் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் போட்டி இன்று தொடங்கியுள்ளது.
ஹர்திக்பாண்ட்யா தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மன்கில், இஷான்கிஷான் களமிறங்க உள்ளனர். மிடில் ஆர்டரில் விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் உள்ளனர். விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் களமிறங்குகிறார். ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், கேப்டன் ஹர்திக்பாண்ட்யா களமிறங்கியுள்ளனர். முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி வேகப்பந்துவீச்சில் அசத்த உள்ளனர்.
போட்டி நடக்கும் மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு நல்ல சாதகமாக இருக்கும் என்பதால், பேட்டிங்கில் இரு அணிகளும் வெளுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கலாம். முதலில் பேட் செய்யும் ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ், மேக்ஸ்வெல், கிரீன், ஸ்டோய்னிஸ் அதிரடியில் அசத்துவார்கள் என்று நம்பலாம். இந்திய அணியிலும் இளம் வீரர்கள் சுப்மன்கில் – இஷான்கிஷான், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக், ஜடேஜா ஆகியோர் அசத்துவார்கள் என்று நம்பலாம்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கி உள்ளது. இதனால், முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி உள்ளது. வான்கடே மைதானம் சேசிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி கேப்டன் ஹர்திக்பாண்ட்யா சேசிங்கை தேர்வு செய்துள்ளார். 19-ந் தேதி விசாகப்பட்டினத்தில் 2வது ஒருநாள் போட்டியிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22-ந் தேதி சென்னையிலும் நடக்க உள்ளது.

ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தவெக?: சா.ரஜினிகாந்த்

சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் சா.ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜென்சி

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்: – தங்கம் தென்னரசு

சென்னை:பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று முதல்வர்

அக்.2 முதல் மாநகர, நகரங்களில் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: முதல்வர்

சென்னை:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110–&ன கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்ச. ஜோசப்

பொங்கல் பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள்: முதல்வர்

சென்னை:ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை