ரூ.35 ஆயிரம் கோடி பெட்ரோ கெமிக்கல் திட்ட பணிகளை நிறுத்திய அதானி குழுமம்

குஜராத்:
அதானி குழுமம் குஜராத்தில் உள்ள முந்த்ராவில் ரூ.34,900 கோடி மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. இதனையடுத்து அதானி குழுமம் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், முதலீட்டாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் நிறுவனங்களின் வளங்களில் (நிதி) கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி) நாட்டின் மின்சார பயன்பாடு 1,37,557 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். 2021-22ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் நம் நாட்டில் 1,24,554 கோடி யூனிட்களாக இருந்தது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி, செலவின குறைப்புகளை முன்மொழியுமாறும், வரும் வாரங்களில் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் பட்டியலை தொகுக்குமாறும் தனது மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் டிஸ்னி நிறுவனம் தனது பணியாளர்களில் குறைந்தபட்சம் 4 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மது வாங்குபவர்கள் வாங்கும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பசு செஸ் (வரி) விதிக்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தாக்கல் செய்த அம்மாநில பட்ஜெட்டின்படி, இந்த நடவடிக்கையால் (பசு செஸ் வரி விதிப்பால்) ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 2022 மார்ச் வரையிலான 3 ஆண்டுகளில் பசு செஸ் வாயிலாக ரூ.2,176 கோடி ஈட்டியுள்ளது. ஆனால் ராஜஸ்தான் அரசு, மது விற்பனை மீது பசு செஸ் வரி விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400