அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்கம் – ஐக்கிய அரபு அமீரகத்தில் …

ஷார்ஜா: ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். தொடக்க நாளான இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணியை சந்திக்கிறது.

ஸ்காட்லாந்து முதல்முறையாக டி20 உலகக் கோப்பையில் அறிமுகமாகிறது. அந்த அணி பயிற்சி ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்திருந்தது. அதேவேளையில் இலங்கையிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருந்தது. வங்கதேச அணி பயிற்சி ஆட்டத்தில் இலங்கையிடம் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதுவரை வங்கதேச அணிக்கு எதிராக 4 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து விளையாடி உள்ளது. இதில் ஒன்றில் கூட அந்த அணி வெற்றி பெற்றது இல்லை.

6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 5-ம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்த டி20 கிரிக்கெட் திருவிழாவில் இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் களமிறங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நாளை (4-ம் தேதி) நியூஸிலாந்துடன் மோதுகிறது. அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 6-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. தொடர்ந்து இலங்கை அணியுடன் 9-ம் தேதியும், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் 13-ம் தேதியும் மோதுகிறது இந்திய அணி.

இதுவரை நடைபெற்றுள்ள 8 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஒரே ஒரு முறை மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது.

இம்முறை போட்டி நடைபெறும் ஷார்ஜா மற்றும் துபாய் மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை. இதனால் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பேட்டிங்கில் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஆகியோர் வலுவானவர்களாக திகழ்கின்றனர்.

இந்திய அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், அருந்ததிரெட்டி, ரேணுகா சிங் தாக்குர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், எஸ்.சஜீவன். மாற்று வீராங்கனைகள்: உமா சவுத்ரி, தனுஜா கன்வர், சைமா தாக்குர்.

பரிசுத் தொகை: மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி இரு மடங்காக உயர்த்தி உள்ளது. இதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.6 கோடி வழங்கப்படும். கடந்த 2023-ம் ஆண்டு தொடரில் ரூ.8.4 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. 2-வது இடத்தை பெறும் அணி ரூ.9.8 கோடியை பெறும். அரை இறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.5.7 கோடி வழங்கப்பட உள்ளது. 5 முதல் 8-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.2.25 கோடியும், 9-வது மற்றும் 10-வது இடத்தை பிடிக்கும் அணிகள் தலா ரூ.1.13 கோடியையும் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்கம் – ஐக்கிய அரபு அமீரகத்தில் …

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube