திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 27 ‘தவம்’ (உடலை வாட்டும் துறவறப் பயிற்சி)
குறள் 269:“கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு”
பொருள்: தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு, எமனால் வரும் சாவை வெல்வது கைகூடும் எனப்படுகிறது. அப்படியே, திருமறையும் மத்தேயு 17: 22-23ல் “அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.அவர்கள் அவரைக்கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.” என்றும், மத்தேயு 28: 6ல்”அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;” என்றும், யோவான் 11: 25ல் “இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;” என்றும்,
திருக்குறளும் திருமறையும் தவம் எனும் துறவற நற்பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை







