அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த, முதன்மையான இந்தியாவை நிர்மாணிக்கும் மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையை கொண்டுள்ளது மத்திய பட்ஜெட்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த, முதன்மையான இந்தியாவை நிர்மாணிக்கும் மோடி அரசின் தொலைநோக்குப் பார்வையை கொண்டுள்ளது மத்திய பட்ஜெட் 2025-26 என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய இந்த  பட்ஜெட்டுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடியையும், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனையும்அவர்பாராட்டியுள்ளார்.தொடர்ச்சியான எக்ஸ் தள பதிவுகளில் தமது கருத்துக்களை தெரிவித்துள்ள திரு அமித் ஷா,  விவசாயிகள், ஏழை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் முதல் பெண்கள் கல்வி, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, சுகாதாரம், புத்தொழில்கள், புதிய கண்டுபிடிப்பு, முதலீடு வரை அனைத்துத் துறைகளையும்  உள்ளடக்கிய இந்த பட்ஜெட் தற்சார்பு இந்தியா என்ற திரு மோடியின் கண்ணோட்டத்திற்கு மூல வரைபடமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.பிரதமர் மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் வரை வருமான வரி இல்லை என்ற பட்ஜெட் அறிவிப்பு உள்ளது என்று திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் நலனுக்கு மோடி அரசு உறுதிபூண்டிருப்பதை சுமார் 1.7 கோடி விவசாயிகள் பயனடைவதற்கான பிரதமரின் தன்-தானிய திட்ட அறிவிப்பு பிரதிபலிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.  கிசான் கடன் அட்டையின் மூலம் பெறப்படும் கடன் அளவு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும் விவசாயிகளுக்கு  குறிப்பிடத்தக்க நிவாரணமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.36 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு மிகுந்த நிம்மதி அளிப்பதாகும் என்று குறிப்பிட்டுள்ள திரு அமித் ஷா, அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றும், 2025-26-ல் மட்டும் 200 சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்என்றும்அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.