பிஐஎஸ் வழங்கும் டிஜிட்டல் சேவைகள் குறித்தும், தன்னார்வ இணக்கம் மற்றும் பதிவு செயல்முறை

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS), சென்னை கிளை, திருவள்ளூர் மாவட்ட நகை வியாபாரிகள் பயன்பெறும் வகையில் சென்னை அருகே ஆவடியில், ஹால்மார்க்கிங் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. திருவள்ளூர் மாவட்டம் ஹால்மார்க்கிங் விதிமுறைகளின் கீழ் கட்டாயமற்ற மாவட்டமாக இருப்பதால், ஹால்மார்க்கிங் தரநிலைகள், ஒழுங்குமுறை விதிமுறைகள் மற்றும் தடையற்ற இணக்கத்திற்காக பிஐஎஸ் வழங்கும் டிஜிட்டல் சேவைகள் குறித்தும், தன்னார்வ இணக்கம் மற்றும் பதிவு செயல்முறை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குனர் மற்றும் தலைவர் திரு.S.D.தயானந்த் வரவேற்புரை வழங்கி, நிகழ்ச்சியின் நோக்கங்களை விளக்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஹால்மார்க்கிங் கட்டாயமாக இல்லாவிட்டாலும், நகை வியாபாரிகள் தன்னார்வமாக ஹால்மார்க்கிங் நடைமுறைகளை ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “இது நுகர்வோரின் நம்பிக்கையை உயர்த்துவதோடு, எதிர்கால கட்டாய நடைமுறைகளுக்கு தயாராக இருக்கவும் உதவும். தரநிலைகளை முன்கூட்டியே ஏற்றுக்கொள்வது, நகை வியாபாரிகளுக்கு போட்டித்திறனையும் உயர்த்தும்,” என அவர் குறிப்பிட்டார். மேலும், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் வசதிகள் மூலம் நகைத் துறையில் தரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்த பிஐஎஸ் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பதிவு செயல்முறை ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுவதுடன், அதற்கு கட்டணச் சுமை இல்லை என்றும், அது ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தொழில்நுட்ப விளக்க உரையை, பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் இயக்குனர் திரு. D. ஜீவானந்தம் வழங்கினார். அவர் ஹால்மார்க்கிங் திட்டத்தின் முக்கிய விதிமுறைகள், நகை வியாபாரிகளின் ஒழுங்குமுறை பொறுப்புகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான இந்திய தரநிலைகளின் தேவைகள், ஹால்மார்க்கிங் செயல்முறை மற்றும் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கினார். நகைகளின் தூய்மையை உறுதி செய்யவும் தடைசெய்யப்பட்ட மூலப்பொருட்கள் இருப்பதை தவிர்க்கவும் தேவையான தரக் கட்டுப்பாட்டு அம்சங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும், HUID (Hallmark Unique Identification) என்பதன் முக்கியத்துவம், இணக்கத் தேவைகள் மற்றும் பிழையற்ற செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்களையும் விளக்கினார். மேலும், நகை வியாபாரிகள் National Single Window System மூலம் ஆன்லைன் முறையில் பதிவு செய்வது எப்படி என்பதையும் விளக்கினார். இணைய முகவரி: (https://www.nsws.gov.in/portal/approval-details/ministry-of-consumer-affairs/registration-of-jewellers-for-selling-hallmarked-jewellery-artefacts).மேலும், e-BIS தளம் குறித்து விளக்கி, ஆன்லைன் விண்ணப்பங்களை எளிதாக மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். நுகர்வோர் புகார் தீர்வு, உரிமச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பொருட்களின் உண்மைத்தன்மை அறிதல் போன்ற வசதிகளுக்காக BIS Care App-ஐ பயன்படுத்துமாறு பங்கேற்பாளர்களை கேட்டுக்கொண்டார். மேலும், தரநிலைகள் தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் திருத்தங்களை அறிய Standards Watch-ஐ கண்காணிக்குமாறும் ஊக்குவித்தார்.பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், ஹால்மார்க்கிங் நடைமுறை, HUID அமலாக்கம், ஹால்மார்க்கிங் மையங்களுடன் ஒருங்கிணைப்பு, ஆவணத் தேவைகள் மற்றும் இணையதள பயன்பாடு தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் BIS Care App-ஐ பயன்படுத்தி ISI மற்றும் CRS குறியீடுகளை சரிபார்த்து பொருட்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யவும், நகைகள் வாங்கும் முன் HUID எண்ணை சரிபார்க்கவும் பிஐஎஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.