அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய அமைச்சகங்கள் விளக்கம் முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் – ஐஐடி மெட்ராஸ் ஆய்வு முடிவுகள் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி? மஜித் வான் பாதுகாப்பு அமைப்பால் மேற்கு ஆசியா போரில் புதிய திருப்பம் காட்டுமன்னார் கோவில் தொகுதி

மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய அமைச்சகங்கள் விளக்கம்

மேற்கு ஆசிய சூழல் குறித்து, மத்திய அரசு இன்று புதுதில்லி தேசிய ஊடக மையத்தில் நடத்திய ஒரு விளக்கக் கூட்டத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள், வெளியுறவு மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகங்களின் அதிகாரிகள் பங்கேற்று, எரிபொருள் இருப்பு, கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்தியர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.  அதன் முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

மாறிவரும் புவிசார் அரசியல் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, தடையற்ற நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்வதற்கும் பற்றாக்குறையைத் தடுப்பதற்கும், நிலக்கரி அமைச்சகம், மேம்பட்ட கிடைக்கும் தன்மை மூலம் மலிவு விலையை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. மேலும் மின்சார அமைச்சகம், ரயில்வே மற்றும் மாநில அரசுகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பு உள்ளிட்ட செயலூக்கமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மதிப்புச் சங்கிலி முழுவதும் போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 06 ஆம் தேதி நிலவரப்படி அனல் மின் நிலையங்களில் உள்ள நிலக்கரி கையிருப்பு,  55.18 மில்லியன் டன்னாக உள்ளது. இது, சமீபத்திய நுகர்வின் அடிப்படையில் சுமார் 24 நாட்களுக்குப் போதுமானதாகும். மேலும், சுமார் 171.90 மில்லியன் டன் நிலக்கரி, சுரங்கங்களிலும் போக்குவரத்திலும் கையிருப்பில் உள்ளது.

தற்போது நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலையால் எல்பிஜி விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின்  விநியோகம் வழக்கம் போல் உள்ளது. 07.04.2026 அன்று, 53.5 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன.

மார்ச் 23, 2026 முதல், சுமார் 8.9 லட்சம் 5-கிலோ தடையில்லா வர்த்தக எல்பிஜி (எஃப்டிஎல்) சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதத்தில் அன்றாட சராசரி 77,000 ஆக இருந்த நிலையில், 07.04.2026 அன்று நாடு முழுவதும் 1.1 லட்சத்திற்கும் அதிகமான 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. மார்ச் 14, 2026 முதல் சுமார் 93,085 மெட்ரிக் டன் வர்த்தக எல்பிஜி (49 லட்சத்திற்கும் அதிகமான 19-கிலோ சிலிண்டர்களுக்குச் சமம்) சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. நேற்று, 6646 மெட்ரிக் டன் வர்த்தக எல்பிஜி (3.5 லட்சத்திற்கும் அதிகமான 19-கிலோ சிலிண்டர்களுக்குச் சமம்) சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன.

இதுவரை 1754-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகளின் பாதுகாப்பாக  தாயகம் திரும்பியுள்ளனர். இதில், கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் பேர் இந்தியா திரும்பினர்.

இந்தியா முழுவதும் துறைமுகச் செயல்பாடுகள் எந்தவித நெரிசலும் இன்றி இயல்பாகத் தொடர்கின்றன. புதுச்சேரி, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, ஆந்திரப் பிரதேசத்தின் கடல்சார் வாரியங்கள், சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்துள்ளன

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் – ஐஐடி மெட்ராஸ் ஆய்வு முடிவுகள்

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, 2040-ம் ஆண்டிற்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது

🛡️இன்று (ஏப்ரல் 7, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட

மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளில்,பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், வாக்களிப்பதன் அவசியம் குறித்துநாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மூலமாக ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, சென்னை மெரினாகடற்கரையில் உள்ள 2 நீலக்கொடி

தேர்தல் விழிப்புணர்வு

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-னை முன்னிட்டு, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட