ஏழைகளின் முன்னேற்றம் என்ற ‘அந்த்யோதயா’ கொள்கையின் அடிப்படையில், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலனை வலுப்படுத்துகின்றன: மத்திய அமைச்சர் செல்வி கரந்த்லாஜே

தொழிலாளர் சட்ட விதிமுறைகளில் உள்ள இணக்க நடைமுறைகளை  எளிதாக்குதல், தொழிலாளர் நலனை வலுப்படுத்துதல், நவீன, வெளிப்படையான தொழிலாளர் சூழலமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாட்டில் உள்ள 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக ஒருங்கிணைத்து, ஏழைகளின் முன்னேற்றம் என்ற ‘அந்த்யோதயா’ கொள்கையின் அடிப்படையில், இந்தியா விரிவான தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே தெரிவித்தார்.மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற 114-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ளது.இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், இதனை ஏற்பாடு செய்ததற்காக, சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், விரைவான மாற்றம் கண்டு வரும் உலகளாவிய சூழலில், சமூக நீதி,  கண்ணியமான வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில்,  சர்வதேச தொழிலாளர் அமைப்பின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.மேலும், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன் 2014-ல் 34 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் 56 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2017-2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6 சதவீதத்திலிருந்து 3.1-சதவீதமாகக் குறைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளையில், பணியிடங்களில், பெண்களின் பங்கேற்பு 22-சதவீதத்திலிருந்து 38.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச