குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நீண்டகால வெற்றிக்குத் தரம், புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு அவசியம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ‘சர்வதேச குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், குறு, சிறு, நடுத்தரத் தொழில்  நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) பொருளாதார வகைப்பாட்டிற்கு உட்பட்ட நிறுவனங்களாக இருப்பதுடன், அவை முதல் தலைமுறை தொழில்முனைவோரின் துணிச்சல், இளைஞர்களின் லட்சியங்கள், பெண் தொழில்முனைவோரின் உறுதிப்பாடு, சவால்களை வாய்ப்புகளாக மாற்றியமைத்துள்ள லட்சக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்களின் மன உறுதி ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கின்றன என்று கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்கள், ஆற்றல்மிக்க எம்எஸ்எம்இ துறையால் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தொழில்முனைவோர் பயணத்தில் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட குடியரசு துணைத் தலைவர், பட்டப்படிப்பை முடித்த பிறகு, தனது தந்தையின் நிதி உதவியுடன் ஒரு சிறிய ஆடை விற்பனையகத்தைத் தொடங்கியதாகக் கூறினார். தொடக்க காலத்தில் எதிர்கொண்ட சவால்களை நினைவுகூர்ந்த அவர், விடாமுயற்சி, தொடர்ச்சியான கற்றல், கடின உழைப்பு ஆகியவை பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முன்பு, ஒரு முன்னணி பின்னலாடை ஏற்றுமதி வணிகத்தை உருவாக்க தனக்கு உதவியதாகக் கூறினார். தொடக்ககாலத் தடைகளைக் கண்டு ஒருபோதும் மனச்சோர்வடைய வேண்டாம் என்றும், தொழிலைக் கற்றுக்கொள்வதில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும் என்றும், இளம் தொழில்முனைவோரை அவர் கேட்டுக் கொண்டார்.தேங்காய் நார் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றிய காலத்தை நினைவுகூர்ந்த திரு சி.பி. ராதாகிருஷ்ணன், அத்துறை குறித்து தனக்கு பெரிய அளவில் ஞானம் இல்லை என்ற போதிலும், அத்துறையின் ஒவ்வொரு அம்சத்தையும் புரிந்துகொள்வதில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதாகக் கூறினார். ஏற்றுமதியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியதாலும், லட்சிய இலக்குகளை நிர்ணயித்ததாலும், அத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்ததாக அவர் தெரிவித்தார். சாதிக்க வேண்டும் என்ற முடிவுடன், கடினமாக உழைத்து, றை சார்ந்த அனைத்தையும் கற்றுக்கொண்டால், வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும்,” என்று அவர் கூறினார்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்

சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பையைப் பிரிப்போம் & நாளையை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமககளிடையே குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை

கூடுவாஞ்சேரியில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி பிரியாணி சமைத்த ஜோடி; உடல் பாகங்கள் ரயிலில் கண்டெடுப்பு

கூடுவாஞ்சேரி:கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் முதல்-வர் பங்கேற்பா?- அமைச்சர் நிர்மல்குமார் பதில்

மதுரை:மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மதுரை

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழக ஆசிரியர்கள் தேர்வு:- முதல்வர் விஜய் வாழ்த்து

சென்னை:தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய்