சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கான்வே, சான்ட்னர் இணைந்தனர்

சென்னை:
வருகிற 31-ம் தேதி துவங்க உள்ள ஐபிஎல் 2023 சீசனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெவோன் கான்வே மற்றும் மிட்செல் சான்ட்னர் இணைந்துள்ளனர். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்துள்ளது.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாட உள்ளது. ஐபிஎல் சீசனை முன்னிட்டு சென்னை அணியில் இடம்பெற்றுள்ள தோனி, ஜடேஜா, ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி என அனைத்து வீரர்கள் சென்னையில் அதற்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்போது இந்த அணியில் நியூஸிலாந்து நாட்டை சேர்ந்த கான்வே மற்றும் சான்ட்னர் இணைந்துள்ளனர். 31 வயதான கான்வே கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இதுவரை 7 ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். மொத்தம் 252 ரன்கள் எடுத்துள்ளார். 22 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் இதில் அடங்கும். 3 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார். இவர் தொடக்க ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 முதல் சான்ட்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் விளையாடியுள்ள 12 போட்டிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான். ஆல்-ரவுண்டரான இவர் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை பயன்படுத்திக் கொள்கிறார். 10 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400