பிரதமர் நரேந்திர மோடி சண்டிகரில் அதிநவீன தாய்-சேய் நல மையம் மற்றும் அதிநவீன நரம்பியல் அறிவியல் மையத்தை திறந்து வைத்தார்

சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) ‘மேம்பட்ட தாய்- சேய் நல மையம்’ மற்றும் ‘மேம்பட்ட நரம்பியல் அறிவியல் மையம்’ ஆகியவற்றை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மேலும், ‘பிரதமரின்  ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின்’ கீழ், 150 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன ‘தீவிர சிகிச்சைப் பிரிவு’ கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியுமான திரு குலாப் சந்த் கட்டாரியா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் சண்டிகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மணீஷ் திவாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அதிநவீன மருத்துவ வசதிகளின் துவக்கம் மற்றும் அதற்கான அடிக்கல் நாட்டல் ஆகியவை, லட்சக்கணக்கான மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவைகள் கிடைப்பதை கணிசமாக வலுப்படுத்தும் என்று கூறினார்.  மக்களின் தொடர் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், “தூய்மை என்பது ஒரு நாள் செயல்பாடு அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை,” என்று குறிப்பிட்டார். “தூய்மை பாரதம்” முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புத் தூய்மைப் பணியைப் பாராட்டிய அவர், நோய்த்தடுப்பில் இத்தகைய பிரச்சாரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்று குறிப்பிட்டார்.

“12 ஆண்டுகளுக்கு முன், சுகாதார வசதிகள் இல்லாததால் எந்தவொரு குடிமகனும் பாதிக்கப்படக்கூடாது என்றும், தரமான சிகிச்சை மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்றும் நாங்கள் உறுதி மேற்கொண்டோம். கடந்த 12 ஆண்டுகளில் எட்டப்பட்ட சாதனைகள் இந்த உறுதிப்பாட்டின் விளைவே ஆகும்”, என்று பிரதமர் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.