அவைத்தலைவர்: மாண்புமிகு உறுப்பினர்களே அவையின் முன்னாள் உறுப்பினர்கள் ஸ்ரீமன் பல்பீர் கே புஞ்ச், ஸ்ரீமன் ஸ்வபன் சதன் போஸ், ஸ்ரீமன் ரங்கசாயி ராமகிருஷ்ணா, ஸ்ரீமன் எச் ஹனுமந்தப்பா மற்றும் கத்தார் நாட்டு அமீர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல்-தானி ஆகியோரின் மறைவு குறித்து நான் வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன்.
ஸ்ரீமன் பல்பீர் கே புஞ்ச் உத்தரப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரையும், ஒடிசா மாநிலத்தில் இருந்து 2008-ல் இருந்து 2014-ம் ஆண்டு வரையும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவர் 2026 ஏப்ரல் 18 அன்று தமது 76-ம் வயதில் காலமானார்.
ஸ்ரீமன் ஸ்வபன் சதன் போஸ் மேற்குவங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2005-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அவர் 2026 மே 12 அன்று தமது 78-ம் வயதில் காலமானார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் 1948 ஜனவரி 23 அன்று பிறந்த அவர், நாட்டில் கால்பந்து மற்றும் விளையாட்டு நிர்வாகத்தின் மேம்பாட்டிற்காக ஆற்றிய பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.
கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமன் ரங்கசாயி 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை பணியாற்றினார். தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 1934-ம் ஆண்டு மார்ச் 15 அன்று பிறந்த அவர், பல ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டார். 2026-ம் ஆண்டு ஜூன் 4 அன்று தமது 92-ம் வயதில் அவர் காலமானார்.







