131 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட எம்.சி.சி. அசோசியேஷனின் கீழ் இயங்கும் முன்னணி சிபிஎஸ்இ கல்வி நிறுவனமான எம்.சி.சி. பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற MCC World Records Festival 2026-ல் 1,137-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 90 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து பங்கேற்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜோலி சஜி மத்துயூ, இந்த விழாவில் 6 குழு உலகச் சாதனைகள் மற்றும் 50 தனிநபர் உலகச் சாதனைகள் என மொத்தம் 56 உலகச் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்தச் சாதனைகள் Elite World Records, Asian Book of Records, Indian Book of Records மற்றும் Long Tamilan Book of Records ஆகிய அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதில்
மாணவர்கள் எழுதிய புனைகதை நூல் தொடர்கள், 18 மணி நேர ரோபோடிக்ஸ் மராத்தான், 24 மணி நேர தொடர் வேதாகம வாசிப்பு, பெருமளவிலான மனக்கணக்கு நிகழ்ச்சி, காய்கறி அச்சுக் கலை மற்றும் குடைகளுடன் கூடிய விளையாட்டு அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்த உலகச் சாதனையை நினைவுகூரும் வகையில், உலகச் சாதனையாளர்களுகு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி எம்.சி.சி. பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.
“ஒரே விழாவில் 56 உலகச் சாதனைகளை நிகழ்த்தி கல்வி, அறிவியல், கலை மற்றும் திறமைகளை ஒருங்கிணைத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ள எம்.சி.சி. பப்ளிக் பள்ளிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 99:இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. விளக்கம்: இன்சொல்





