பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட மின் இணைப்புக் கொண்ட கிராமப்புற வீ்ட்டு நுகர்வோர் அனைவரும் தேசிய இணையதளத்தில் (www.pmsuryaghar.gov.in) விண்ணப்பிப்பதன் மூலம் வீடுகளின் மேற்கூரையில் மின்சக்தி அமைப்புகளை நிறுவலாம்.
இத்திட்டத்தின் கீழ், 2025-26-ம் ஆண்டு 18 லட்சத்து 71 ஆயிரம் மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டன. இதனால் 6.7 ஜிகாவாட் சூரிய மின்சக்தித் திறன் உற்பத்திச் செய்யப்பட்டு நாடு முழுவதும் 22.71 லட்சம் வீடுகள் பயனடைந்துள்ளன.
இத்திட்டம் தொடங்கப்பட்ட 2024 பிப்ரவரி முதல் 2026 ஜூலை 22 வரை மொத்தம் 39,72,447 மின்சக்தி அமைப்புடன் நிறுவனப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்த வீடுகள் உட்பட 48,02,717 வீடுகள் பயனடைந்துள்ளன.
இத்திட்டத்தின் கீழ், நுகர்வோரின் மின்சாரக் கட்டணங்கள் பெருமளவு குறைந்துள்ளன. மேலும், ஏதேனும் ஒரு மாதம் அல்லது கட்டணக் காலத்தில் 18 லட்சத்து 93 ஆயிரம் பயனாளிகள் மின்கட்டணமில்லாத நிலையைப் பெற்றனர்.
இத்தகவலை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.






