தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1) தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளன. இந்தக் காலகட்டத்தில், 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில், 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். அவர்கள் அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பை நடத்துவார்கள். 33 கேள்விகளைக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி, இந்தப் பணியானது மேற்கொள்ளப்படும். வீட்டுவசதி நிலை, அடிப்படை வசதிகள் போன்ற முக்கிய தரவுகள் சேகரிக்கப்படும்.

விரிவான, துல்லியமான கணக்கெடுப்பை உறுதி செய்வதற்காக, இந்தியாவில் முதல் முறையாக முழுவதும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. களப் பணியின்போது, ​​கணக்கெடுப்பாளர்கள் தரவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஒரு பிரத்யேக மொபைல் செயலியைப் பயன்படுத்துவார்கள். இது விரைவான செயலாக்கம், அதிக துல்லியம், தடையற்ற கணக்கெடுப்பு அனுபவம் ஆகியவற்றை வழங்கும்.

1948-ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்படி, சேகரிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களும் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டு, முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, புள்ளிவிவரப் பகுப்பாய்வு, பொதுக்கொள்கை உருவாக்கம் ஆகியவற்றிற்காக மட்டுமே பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும்.

களச் செயல்பாடுகளுக்கு முன்னதாக, 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுய-கணக்கெடுப்பு வசதியானது, தமிழ்நாட்டு மக்களிடமிருந்து பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரை, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ இணையதளம் (se.census.gov.in) வழியாகத் தங்கள் விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.  

சுய கணக்கெடுப்பை நிறைவு செய்துள்ள அவர்கள், வீட்டுப் பட்டியல் தயாரிப்புப் பணியை எளிதாக்குவதற்காக, வருகை தரும் கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்துகொள்ள, தாங்கள் உருவாக்கிய சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை உடனடியாகக் கைவசம் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுய கணக்கெடுப்பு வசதியைப் பயன்படுத்தாத குடும்பத்தினர் உட்பட அனைத்துக் குடும்பங்களும், வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்புக் களப்பணிகளின் போது உள்ளடக்கப்படுவார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.