சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை:
சுதந்திர தின விழாவையொட்டி போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரை அமைந்துள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகியவற்றில் உரிய வாகன அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே, வாகனங்களில் செல்லமுடியும். உரிய அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக திருப்பிவிடப்படும். அதேபோல, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்களும், வடக்குகோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை சந்திப்பு, முத்துசாமி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டையில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள வாகனங்களில் வருபவர்களுக்கு, வாகன அனுமதி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் ‘பர்பிள்’ வண்ண அனுமதி அட்டைகள் வைத்திருப்பவர்கள் காலை 8 மணி வரை கோட்டை உள்வாயில் அருகே போக அனுமதி உண்டு. அவர்கள் கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும். ராஜாஜி சாலை வழியாக வருபவர்களுக்கும் இந்த அனுமதி பொருந்தும்.
இதே அடையாள அட்டையுடன், போர் நினைவுச் சின்னம் வழியாக வருபவர்கள் கொடிமர சாலை, முத்துசாமி பாலம், பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று கோட்டையின் வெளி வாயில் அருகே இறங்கிக்கொண்டு, தங்களது வாகனங்களை கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை இடத்தில் நிறுத்தவேண்டும்.
நீல மற்றும் ‘பிங்க்’ வண்ண அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக போர் நினைவு சின் னம், கொடிமர சாலை, முத்துசாமி சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி வழியாக சென்று கோட்டையின் வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். வாகனங்களை பொதுப்பணித்துறை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
நீல மற்றும் ‘பிங்க்’ வண்ண அனுமதி அட்டை வைத்திருக்கும், காமராஜர் சாலை வழியாக வருபவர்கள் காலை 8.30 மணிக்கு பின்னர் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை வழியாக சென்று முத்துசாமி பாலம், பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக சென்று கோட்டையின் வெளிவாயில் அருகே இறங்கிக் கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை இடத்தில் வாகனங்களை நிறுத்தவேண்டும்.
வாகன அனுமதி அட்டை இல்லாதவர்கள் போர் நினைவு சின்னம் அருகே இறங்கிக்கொள்ள வேண்டும். வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்தவேண்டும் என்று போக்குவரத்து போலீசார் சார்பில் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.