தமிழக சட்டப்பேரவை – நாடாளுமன்ற கூட்டத்துக்கு கருப்பு சட்டையுடன் வந்த காங்கிரஸ் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள்

சென்னை:
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி காலை தொடங்கியது. மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையும் 21-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான மூன்றாம் நாள் விவாதம் வினாக்கள்- விடை நேரத்துடன் இன்று தொடங்குகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அவதூறு வழக்கு ஒன்றில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். Stand with Rahul என்ற பதாகையை ஏந்தி சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க வந்தனர். ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து இன்று இரவு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தவும் காங்கிரஸ் உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 21ஆம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற தொடர் தொடங்கிய நிலையில், முதலில் பொருளாதார ஆய்வறிக்கையும் அதன் பிறகு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது
அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் இப்போது இரண்டு அமர்வுகளாக நடந்து வருகிறது. முதல் அமர்வு கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் அமர்வு நடைபெற்று வருகிறது. அவை தொடங்கி 9 நாட்கள் கூட்டம் முடிவடைந்த நிலையில், இன்னும் அவை நடவடிக்கைகள் நடக்கவில்லை. பட்ஜெட் மீதான விவாதம் எதுவும் நடைபெறவில்லை.
ஆன்லைன் தடை விவகாரம், ராகுல் காந்தி சிறை மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் மீண்டும் நாடாளுமன்றம் இன்று கூடியது. முன்னதாக காங்கிரஸ் எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அமளி காரணமாக தினமும் ஒத்திவைக்கப்பட்டு வரும் சூழலில், இன்று காங்கிரஸ் கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.