சென்னை:
DAYA(A)) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை (குரோம்பேட்டை) தாம்பரம் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துனையில் தினமும் சுமார் 800க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப மருத்துவரை பார்க்கின்றனர். அதற்கே பல மணி நேரம் பாத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்பாடியா ஒரு வழியாக மருத்துவரை பார்த்துவிட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்க சென்றால் அங்கிருக்கும் நீண்ட நெடிய வரிசையை பார்த்ததும் நோயாளிகளுக்கு உடனடியாக தலை சுற்றிவிடுகிறது.
மாத்திரை வழங்க 4 கவுன்டர்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 50க்கும் மேற்பட்டோர் நிற்கின்றனர். இதனால் காலையில் வரிசையில் நிற்க ஆரம்பித்தால் மதியம் வரை ஆகிவிடுகிறது. நோயாளிகளுக்கு மேலும் நோய் பாதிப்பை இது அதிகமாக்குவதாக உள்ளது. மிகவும் சோர்வடையும் நோயாளிகள் அவர்களுக்கு முன்னே இருப்பவர்களிடம் கூறிவிட்டு அருகே சற்று ஓய்வெடுத்துவிட்டு வந்தால் அவர்கள் மறுபடியும் நீண்ட வரிசையில் காத்திருந்தே வர வேண்டிய அவல நிலை உள்ளது. அவ்வாறு இருந்தும் பயண் கிடையாது. நேரம் முடிந்ததும் மாத்திரை கிடையாது. நாளை வாருங்கள் என்று கூறி அனுப்பி விடுகின்றனர்.
இதுபோன்ற அவல நிலையை போக்க தமிழக அரசு முன்வர வேண்டும். நோயாளிகளின் அவல நிலையை கருத்தில் கொண்டு நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பட காலவிரயத்தை தடுக்க கூடுதலாக எத்தனை மாத்திரை கவுன்டர்களை திறக்க முடியுமோ அவற்றை திறந்து நோயாளிகளின் சிரமத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.







